Enable Javscript for better performance
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தை நெருங்கினார் பிளிஸ்கோவா- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தை நெருங்கினார் பிளிஸ்கோவா

    By DIN  |   Published on : 17th September 2019 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt2

    சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் (டபிள்யுடிஏ) முதலிடத்தில் உள்ள ஆஷ்லி பர்டியை நெருங்கியுள்ளார் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா.
    சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் டபிள்யுடிஏ திங்கள்கிழமை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பர்டி 6501 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
    இதற்கிடையே சீனாவின் ஸெங்ஷெள ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6415 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தைப் பெற அவருக்கு 86 புள்ளிகளே தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
    எலினா விட்டோலினா 5131, நவோமி ஒஸாகா 4846, பியான்கா ஆன்ட்ரீஸ்கு 4835, சிமோனா ஹலேப் 4803, பெட்ரா குவிட்டோவா 4326, கிகி பெர்டென்ஸ் 4325, செரீனா வில்லியம்ஸ் 3935, பெலின்டா பென்கிக் 3738 ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai