சீன ஓபன் பாட்மிண்டன்: வெல்ல பி.வி.சிந்து முனைப்பு

சீன ஓபன் பாட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றுவாரா உலக சாம்பியன் பி.வி.சிந்து என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீன ஓபன் பாட்மிண்டன்: வெல்ல பி.வி.சிந்து முனைப்பு

சீன ஓபன் பாட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றுவாரா உலக சாம்பியன் பி.வி.சிந்து என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாங்ஷெள நகரில் உலக பாட்மிண்டன் சூப்பர் சீரிஸ் 1000 போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. கடந்த மாதம் பேஸலில் நடைபெற்ற உலகப் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ளார்.இந்த வெற்றிக்கு பின் நாடு முழுவதும் சிந்துவுக்கு தொடர்ந்து பாராட்டு விழாக்கள் நடைபெற்றன. 
இந்நிலையில் அவர் சீன ஓபன் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதில் முதல் சுற்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ ஸெயுரியை எதிர்கொள்கிறார் அவர். கடந்த 2012 தான் ஆடிய முதல் சர்வதேச போட்டியில்  லீ ஸெயுரையை வென்றிருந்தார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் சிந்துவிடம் தோற்றிருந்தார் லீ. காலிறுதிக்கு சிந்து தகுதி பெற்றால் மூன்றாம் நிலை வீராங்கனை சென் யுபெயுடன் மோதுவார் சிந்து.
மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால், தொடர் காயங்களில் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்தார். முதல் சுற்றில் தாய்லாந்தின் புஸானனை எதிர்கொள்கிறார் சாய்னா.
கரோலினா மரின் பங்கேற்பு: காயத்தால் கடந்த சில மாதங்களாக ஆடாமல் இருந்த ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் இந்த போட்டியில் மீண்டும் பங்கேற்கிறார். அதே போல் ஆடவர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்லெஸன் காயத்தில் இருந்து மீண்டு இந்த போட்டியில் பங்கேற்கிறார்.
இந்திய ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த், எச்எஸ். பிரணாய் ஆகியோர் விலகி விட்டனர். எனினும் உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற சாய் பிரணீத் இதில் கலந்து கொண்டு ஆடுகிறார்.
இரட்டையர் பிரிவில் சத்விக்-சிராக்ஷெட்டி, கலப்பு இரட்டையரில் அஸ்வினி-சத்விக், ஆடவரில் மனு அட்ரி-சுமித் ரெட்டி, மகளிர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி, சிக்கி-பிரணவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com