துளிகள்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர், தேர்வுக் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மிஸ்பா உல் ஹக், உள்ளூர் போட்டிகள் மற்றும் தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வீரர்களின் உணவு முறை,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர், தேர்வுக் குழுத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மிஸ்பா உல் ஹக், உள்ளூர் போட்டிகள் மற்றும் தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வீரர்களின் உணவு முறை, சத்துணவு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார்.

2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலை நீக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இங்கிலாந்து காமன்வெல்த் விவகாரங்கள் அமைச்சர் தாரிக் அஹமதுவுக்கு, வங்கதேச விளையாட்டுத் துறை அமைச்சர் முகமது ஸாஹித் கடிதம் எழுதியுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே இந்தியாவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கஜகஸ்தானின் நுர் சுல்தான் நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய வீரர் நவீன் பதக்கத்துக்கான போட்டியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். 77 கிலோ பிரிவில் குர்ப்ரீத் சிங், 60 கிலோ பிரிவில் மணிஷ் ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினர்.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி 2019-ஐ மொத்தம் 160 கோடி பேர் நேரடியாக கண்டு களித்தனர் என ஐசிசி தெரிவித்துள்ளது.   இதில் குறிப்பாக இந்திய-நியூஸிலாந்து அரையிறுதி ஆட்டத்தை ஹாட்ஸ்டார் மூலம் 2.5 கோடி பேர் பார்த்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com