தென்னாப்பிரிக்கா-இந்தியா இன்று 2-ஆவது டி20: வாய்ப்பை தக்க வைப்பாரா ரிஷப் பந்த்?

முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை
தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்.
தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்.


முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை சரிவர பயன்படுத்துவரா என  எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தர்மசாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
எங்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இளம் வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை  பயன்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும் என கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் நடைபெறுகிறது. 
டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் சரியாக ஓராண்டே உள்ளது. இந்நிலையில் 21 வயதான ரிஷப் பந்த், முந்தைய மே.இ.தீவுகள் தொடரிலும் சரிவர ஆடவில்லை. தோனியின் வாரிசாக கருதப்படும் ரிஷப் பந்த்துக்கு தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது.
ஆனால் பேட்டிங்கில் அவரது ஆட்டம் சோபிக்காத நிலை உள்ளது. இது அணி நிர்வாகத்துக்கு கவலையை தருகிறது. ரிஷப் பந்த் தேவையின்றி விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுத்து வந்தால், அவர் தனது இடத்தை தக்க வைக்க முடியாது என அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 
ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர்: இளம் சுழற்பந்து வீச்சாளர்களான ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என கோலி வலியுறுத்தியுள்ளார். குல்தீப் யாதவ், யுஜவேந்திர சாஹல் ஆகியோருக்கு பதிலாக இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் பேட்டிங்கிலும் கடைசி ஓவர்களில் ஒரளவு ஆடுவதால் வாய்ப்பு கிடைத்துள்ளது என கோலி கூறியுள்ளார்.
மிடில் ஆர்டரில் ஐயர், பாண்டே: மே.இ.தீவுகள் தொடரில் சிறப்பாக ஆடிய ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே ஆகியோர் மிடில் ஆர்டரை பலப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வரிசை வீரர்கள் வீழ்ந்தாலும், இதனால் மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்து ஆடி ரன்களை குவிக்கும் நிலை உள்ளது.
ஷிகர் தவனுக்கு சோதனை: தொடக்க வீரர் ஷிகர் தவன் மே.இ.தீவுகள் தொடரில் சரியாக ஆடாத நிலையில், இந்த தொடர் அவருக்கு சோதனைக் களமாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க ரன்களை குவித்தால் மட்டுமே அவர் மீது அணி நிர்வாகத்துக்கு நம்பிக்கை ஏற்படும் நிலை உள்ளது.
புதுமுக தென்னாப்பிரிக்கா: அதே நேரம் புது முக வீரர்கள் நிறைந்த தென்னாப்பிரிக்க அணி டி20 ஆட்டத்தில் தங்களை பலப்படுத்திக் கொள்ள இத்தொடரை வாய்ப்பாக கருதியுள்ளது. டூபிளெஸ்ஸிஸ் நீக்கப்பட்டு, டி காக் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காகிúஸா ரபாடா தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சோதனையை ஏற்படுத்துவர் எனக் கருதப்படுகிறது. பேட்டிங்கில் டி காக், ரேஸி வேன் டெர் டுஸன், டேவிட் மில்லர், பியுரன் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடுவர் எனத் தெரிகிறது.

அலட்சியமில்லாமல், அச்சமின்றி ஆட வேண்டும்: விக்ரம் ரத்தோர்


இந்திய அணியின் இளம் வீரர்கள் அலட்சியமில்லாமல் அச்சமின்றி ஆட வேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இது முக்கியமாக தேவையற்ற ஷாட்களை ஆடும் ரிஷப் பந்திடம் கூறப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் தனது ஆட்ட உத்தியை மாற்ற வேண்டும். அலட்சியமின்றி, அச்சமில்லாமல் ஆடுவதில் உள்ள வேறுபாடுகளை இளம் வீரர்கள் அறிய வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் அதிகபட்சமாக 5 ஆட்டங்களே வாய்ப்பு கிடைக்கும் என கோலி கூறியுள்ளார். எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது. அணி நிர்வாகம் அவர்களுக்கு பின் இருக்கும். ஷிரேயஸ் ஐயர்-மணிஷ் பாண்டே தங்கள் வாய்ப்புகளை சிறப்பாக செய்ய வேண்டும். இந்திய அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் உள்ளது மிகவும் வலிமையைத் தரும். முன்பு டி20 ஆட்டத்துக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை. ஆனால் நிலைமை மாறி விட்டது. மீதமுள்ள டி 20 ஆட்டங்கள் முக்கியமானவை என்றார் ரத்தோர்.

கேப்டன் பதவி எனது பேட்டிங்கை பாதிக்குமா எனத் தெரியவில்லை: குயிண்டன் டி காக்
அணியின் கேப்டன் பதவி தனது பேட்டிங் திறனை பாதிக்குமா எனத் தெரியவில்லை என தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இந்த பதவி எனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மைல்கல். கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. டூபிளெஸ்ஸிஸ், டி வில்லியர்ஸ் இருவரும் பலமுறை எனது ஆட்டத்துக்கு வழிகாட்டியுள்ளனர். தலைமைப் பொறுப்பில் இருந்து இளம் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை தருவேன். முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது வருத்தமாக உள்ளது.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பட்டம் வென்றது மிகப்பெரிய நிகழ்வாகும். ரபாடா-கோலி இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com