Enable Javscript for better performance
Gavaskar believes டி20 உலகக் கோப்பைக்கு தோனியைத் தாண்டி யோசிக்கவேண்டும்: கவாஸ்கர் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    டி20 உலகக் கோப்பைக்கு தோனியைத் தாண்டி யோசிக்க வேண்டும்: கவாஸ்கர் கருத்து

    By எழில்  |   Published on : 20th September 2019 02:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhoni881

     

    டி20 உலகக் கோப்பைக்கு தோனியைத் தாண்டி யோசிக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. இந்நிலையில் தோனி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோனியைத் தேர்வு செய்யக்கூடாது. அதைத் தாண்டி நாம் யோசிக்கவேண்டும். என்னுடைய அணியில் தோனிக்கு இடமில்லை. டி20 உலகக் கோப்பை எனும்போது ரிஷப் பந்த் குறித்து நாம் யோசிக்கவேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவர் நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமல்லாமல் நல்ல பேட்ஸ்மேனும் கூட. 

    டி20 உலகக் கோப்பை பற்றி யோசிக்கவேண்டுமென்றால், இளைஞர்களைத் தேர்வு செய்வதைத்தான் நான் பரிந்துரைப்பேன். தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால், அவரைத் தாண்டி யோசிக்கவேண்டிய நேரமிது என்று கூறியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai