ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் தகுதி பெற்றனர்.    
ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா தகுதி


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் தகுதி பெற்றனர்.    
கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இவர்கள் இருவரும் தோல்வி அடைந்தனர்.
57 கிலோ எடைப் பிரிவில் ரவிகுமார் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் ரஷிய வீரர் ஜவுர் உகேவிடம் தோல்வி கண்டார். இருப்பினும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்தத்தில் ஆடவர் பிரிவில் தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் இவரே.
65 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீரர் தாலெத் நியாஸ்பெகோவிடம் 0-4 என்ற கணக்கில் பஜ்ரங் புனியா சரணடைந்தார். இவரும் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.
நுர்-சுல்தானில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவும், ரவி குமாரும் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, இதே போட்டியில் மகளிர் பிரிவில் 53 கிலோ எடைப் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகட், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், முதல் சுற்று ஆட்டத்திலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com