சீனா ஓபன்: காலிறுதியில் சாய் பிரணீத்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலக பாட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத்
சீனா ஓபன்: காலிறுதியில் சாய் பிரணீத்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி


சீனா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலக பாட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் காலிறுதிக்குத் தகுதி பெற்று நம்பிக்கை தந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சூசுவாங்கிடம் 21-12, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியைத் தழுவினார்.
முதல் செட் ஆட்டத்தில் வழக்கம்போல் எதிராளியை மிரட்டிய சிந்து, அடுத்த செட்டை  எளிதாக பறிகொடுத்தார். பரபரப்பாக நகர்ந்த இறுதி செட் ஆட்டத்தில் கடும் சவால் அளித்தார் சிந்து.
இருப்பினும், 21-19 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார் தாய்லாந்து வீராங்கனை சூசுவாங். 50 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
காலிறுதியில் சாய் பிரணீத்: ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரணீத், சீனாவைச் சேர்ந்த லூ ஜியை 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் காஷ்யப், 21-23, 21-15, 12-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷிய வீரர் கின்டிங்கிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், ரங்கிரெட்டி-சிராங் ரெட்டி இணை, ஜப்பான் வீரர்கள் டகேஷி கமுரா-கிகோ சோனோடா இணையிடம் 19-21, 8-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், அஸ்வினி பொன்னப்பா-என்.சிக்கி ரெட்டி இணை, ஜப்பான் வீராங்கனைகள் மிஸாகி மத்சுடோமோ-அயாகா டகாஹஷி இணையிடம் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் சரணடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com