லா லிகா: பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
கிரானடா அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ஆன்ட்ன் கீரிஸ்மேன் அன்ஸூ பேட்டி ஆகியோர் இருந்தும் தோல்வியை தவிர்க்க முடியாமல் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை நடைபெற்ற 5 லீக் ஆட்டங்களில் 2-இல் மட்டுமே பார்சிலோனாவென்றுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் அதலெட்டிகோ மாட்ரிட்-செல்டா விகோ மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.  
சீரி ஏ லீக்: இத்தாலியின் சீரி ஏ லீக் போட்டியில் இன்டர்மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஏசி மிலன் அணியை வீழ்த்தியது. நட்சத்திர வீரர்கள் லுகாகு, மார்செலோ ஆகியோர் அற்புதமாக கோலடித்தனர். 
மற்றொரு ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெரோனா அணியை வீழ்த்தியது. 
ப்ரீமியர் லீக்:  இங்கிலாந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி அணி 8-0 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் லிசெஸ்டர் 2-1 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாம் அணியை வீழ்த்தியது. பர்ன்லி 2-0 என நார்விச்சை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com