பான்பசிபிக் ஓபன்: நவோமி ஒஸாகா சாம்பியன்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
பான்பசிபிக் ஓபன்: நவோமி ஒஸாகா சாம்பியன்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
டோக்கியோவில் நடைபெற்ற இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் உலக முதல்நிலை வீராங்கனை ஒஸாகவும்-ரஷியாவின் அனஸ்டஷியா பவுசென்கோவும் மோதினர். 
ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார் ஒஸாகா.
கடந்த 2016, 2018 இதே போட்டியில் ரன்னராக வந்திருந்தார் ஒஸாகா. கடந்த 2018 யுஎஸ் ஓபன் வெற்றிக்கு பின் ஒஸாகா பெறும் வெற்றி இதுவாகும். 
நடால் விலகல்: யுஎஸ் ஓபன் சாம்பியன் ரபேல் நடால், கையில் ஏற்பட்ட காயத்தால் லேவர் கோப்பை போட்டியில் இருந்து விலகினார். கடந்த 2018-இல் ஐரோப்பிய அணி 13-8 என உலக அணியை வென்றிருந்தது.

ராட் லேவர் கோப்பை:  ஐரோப்பா முன்னிலை


 உலக அணி மற்றும் ஐரோப்பிய அணிகள் இடையிலான ராட்லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய அணி முன்னிலை பெற்றுள்ளது. 
முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர்- அலெக்சாண்டர் வெரேவ் இணை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் உலக அணியின் ஜேக் ஸாக், டெனிஸ் ஷபவோலவை வென்றது. முன்னதாக ஒற்றையர் ஆட்டத்தில் ஜேஸ் ஸாக் 6-1, 7-6 என பேபியோ போகினியை வென்றிருந்தார். எனினும் ஐரோப்பிய வீரர் சிட்சிபாஸ் 6-2, 1-6, 10-7 என்ற புள்ளிக்கணக்கில் டெய்லர் பிரிட்ஸையும், டொமினிக் தீம் 6-4, 5-7, 13-11 என்ற செட் கணக்கில் ஷபவோலவையும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com