தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகிறார் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகிறார் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்க உள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்க உள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து வருகிறார். 
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)-க்கும் தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சீனிவாசன் குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என சிஓஏ அறிவுறுத்தியிருந்தது. 

முதல் பெண் தலைவர்: பிசிசிஐ இணைப்பு பெற்ற மாநில சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார் ரூபா குருநாத்.

வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ரூபாவுக்கு எதிராக எவரும் போட்டியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்சிஏ செயற்குழுக் கூட்டத்தில் துணைத் தலைவராக ஆர்எஸ்.ராமசாமி, இணைச் செயலாளராக கே.ஏ.சங்கர், பொருளாளராக ஜே.பார்த்தசாரதி, உதவி பொருளாளராக என்.வெங்கட்ரமணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கணவர் குருநாத்துக்கு வாழ்நாள் தடை: டிஎன்சிஏ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற கெடுபிடியால் டிஎன்சிஏ தேர்தல்: செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் தேர்தலை நடதத வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலியால் டிஎன்சிஏ தரப்பில் இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை டிஎன்சிஏ தேர்தலை நடத்த அனுமதித்த உச்சநீதிமன்றம், முடிவுகள் தனது தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உத்தரவிட்டது.
குடும்ப ஆதிக்கம் தொடரும் சங்கங்கள்: இதே போல் செளராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷாவின் மகன் ஜெயதேவ் ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகள் முதல்தர கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டவர் ஜெயதேவ். அவரது தலைமையின் கீழ் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜெயதேவ் உனதிகட் ஆகியோர் ஆடியுள்ளனர்.

அதே போல் ஹிமாசலபிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவராக பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகுர் சகோதரர் அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com