டி20 தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் கேப்டன் டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது தென்னாப்பிரிக்கா. 
டி20 தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் கேப்டன் டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது தென்னாப்பிரிக்கா. டி காக் அதிரடியாக ஆடி 79 ரன்களை விளாசினார்.

முதலில் ஆடிய இந்தியா 134/9 ரன்களையும், பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 3 ஓவர் மீதமிருக்க 140/1 ரன்களையும் எடுத்தன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி திணறி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களையே எடுத்தது.

2020-இல் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய-தென்னாப்பிரிக்க அணி பங்கேற்றுள்ள 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக கடைசி ஆட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஷிகர் தவன்-ரோஹித் சர்மா இணை களமிறங்கி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் 9 ரன்களுடன் வெளியேறினார் ரோஹித் சர்மா.

மறுமுனையில் தவன்-விராட் கோலி இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 7 ஓவர்களில் ஸ்கோர் 60-ஐ கடந்தது.

தொடக்கமே சரிவு: 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 36 ரன்களை விளாசிய ஷிகர் தவன் வெளியேற்றினார் ஷம்சி. அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. கேப்டன் கோலி 9 ரன்களுடன் ரபாடா பந்தில் பெலுக்வயோவிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

விக்கெட் வீழ்ச்சி: அதன் பின் ரிஷப் பந்த் 19, ஷிரேயஸ் ஐயர் 5, க்ருணால்பாண்டியா 4 ரன்களுடன் வெளியேறினர். பிஜோன் போர்டியுன் பந்துவீச்சில் பந்த், ஐயர் வெளியேறினர். அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது இந்தியா.

ஹார்திக் பாண்டியா 14, ரவீந்திர ஜடேஜா 19, வாஷிங்டன் சுந்தர் 4 என வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களையே எடுத்தது இந்தியா.

ரபாடா அபாரம்:  தென்னாப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய காகிúஸா ரபாடா 3-39, போர்டியுன் 2-19, பி ஹென்ட்ரிக்ஸ் 2-14 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்திய வீரர்களில் ஒருவர் கூட அரைசதத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

135 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் ரீஸா ஹென்ட்ரிக்ஸ்-கேப்டன் டி காக் இணை தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தனர். இதனால் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்களை கடந்தது.

4 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்திருந்த ஹென்ட்ரிக்ஸை அவுட்டாக்கினார் ஹார்திக் பாண்டியா.

டி காக் சிக்ஸர், பவுண்டரி மழை: கேப்டன் குயிண்டன் டி காக் பவுண்டரியுடன் தனது 4-ஆவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.  அவருடன் இணைந்து டெம்பா பவுமாவும் ஆடி விக்கெட் விழாமல் நிதானமாக ஆடினார்.

5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 79 ரன்களுடன் கேப்டன் டிகாக்கும், 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்களுடன் பவுமாவும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியில் 16.5 ஓவர்களில் 140/1 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா. இந்திய தரப்பில் ஹார்திக் 1-23 விக்கெட்டை சாய்த்தார். இதன் மூலம் தொடரையும் 1-1 என சமன் செய்தது.


சுருக்கமான ஸ்கோர்

இந்தியா 134/9
ஷிகர் தவன் 36
பந்துவீச்சு:  ரபாடா 3-39,
தென்னாப்பிரிக்கா: 140/1
டி காக் 79, பவுமா 27,
பந்துவீச்சு: ஹார்திக் 1-23.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com