துளிகள்...


2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்பட்ட அதிருப்தியை, வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதிப்பேன் என மல்யுத்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் கூறியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மாதவ் ஆப்தே (86) திங்கள்கிழமை மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் காலமானார்.


2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சிஜிஎப்) இடையே வரும் நவம்பர் 14-இல் புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.


ஜஸ்ப்ரீத் பும்ராவின் முறையில்லாமல் பந்துவீசும் பழக்கமே, அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது என ஜாகீர் கான் கூறியுள்ளார்.


காத்மாண்டுவில் திங்கள்கிழமை தொடங்கிய தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.


வரும் அக்டோபர் மாதம் 4, 5 தேதிகளில் மும்பையில்முதன்முறையாக நடைபெறவுள்ள சாக்ரமென்டோ கிங்ஸ்-இந்தியானா பேஸர்ஸ் அணிகள் இடையிலான என்பிஏ கூடைப்பந்து ஆட்டத்தைக் காண தான் திடீரென வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.  


தனது இழந்த பார்மை பெறுவதற்காக இளம் வீரர் ரிஷப் பந்த் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் களமிறங்காமல், கீழ் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என விவிஎஸ்.லஷ்மண் ஆலோசனை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com