அட்டகாசமான பேட்டிங் & பந்துவீச்சு: அபார வெற்றி பெற்ற தமிழக கிரிக்கெட் அணி!

212 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்ற தமிழக அணி, சனியன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் பிஹார் அணியை எதிர்கொள்கிறது. 
அட்டகாசமான பேட்டிங் & பந்துவீச்சு: அபார வெற்றி பெற்ற தமிழக கிரிக்கெட் அணி!

பிசிசிஐ சார்பில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, சர்வீசஸ் அணியை இன்று எதிர்கொண்டது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தமிழக அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் 23 வயது ஹரி நிஷாந்தும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்கள். 55 ரன்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி, ஸ்கோர் 199 என உயர்ந்தபோது தான் அடுத்த விக்கெட்டை இழந்தது. தினேஷ் கார்த்திக் 95 ரன்களும் ஹரி நிஷாந்த் 73 ரன்களும் எடுத்தார்கள். இருவருடைய முயற்சியால் தமிழக அணியால் 294 ரன்கள் குவிக்க முடிந்தது. 

கடினமான இலக்கை எதிர்கொள்ள சர்வீசஸ் அணி பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினார்கள். ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கமுடியாதபடி பந்துவீச்சில் அசத்தினார்கள் தமிழகப் பந்துவீச்சாளர்கள். இறுதியில், 19.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சர்வீசஸ் அணி. தமிழக வேகப்பந்துவீச்சாளர் விக்னேஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

212 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்ற தமிழக அணி, சனியன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் பிஹார் அணியை எதிர்கொள்கிறது. 

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை குரூப் சி பிரிவு போட்டியில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com