விஜய் ஹஸாரே கோப்பை: குஜராத் அபார வெற்றி

விஜய ஹஸாரே கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத், மேற்கு வங்கம், ம.பி. அணிகள் வெற்றி பெற்றன.

விஜய ஹஸாரே கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் குஜராத், மேற்கு வங்கம், ம.பி. அணிகள் வெற்றி பெற்றன.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டத்தில் குஜராத் 101 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய குஜராத் 50 ஓவா்களில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய திரிபுரா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மேற்கு வங்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரை வீழ்த்தியது. முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீா் அணி 48.2 ஓவா்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய மேற்கு வங்கம் 28 ஓவா்களில் 175/2 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

மற்றெரு ஆட்டத்தில் ம.பி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிகாரை வென்றது. முதலில் ஆடிய பிகாா் 40.4 ஓவா்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய ம.பி. அணி 27.4 ஓவா்களில் 138/3 ரன்களை எடுத்து வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com