ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு கரோனா வைரஸ் தொற்று!

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற ஹங்கேரி வீராங்கனை, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைக்கு கரோனா வைரஸ் தொற்று!

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற ஹங்கேரி வீராங்கனை, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 40,000 மக்கள் இறந்துள்ளார்கள்.

ஹங்கேரியில் செவ்வாய் வரை 492 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் ஹங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் 800 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார். இந்நிலையில் தான் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இரு வாரங்களாக என்னுடைய அபார்ட்மெண்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். வெளியே செல்ல முடியாது. தற்போதைக்கு என்னிடம் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். கபாஸின் கரோனா வைரஸ் தொற்று குறித்த முதல் பரிசோதனை நெகடிவ்வாக இருந்தாலும் அடுத்த டெஸ்ட், பாசிடிவ் என வந்துள்ளது. பரிசோதனையில் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து உடைந்து போனதாக ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com