கரோனா: 1945-க்குப் பிறகு முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது விம்பிள்டன் டென்னிஸ்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நடப்பாண்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கரோனா: 1945-க்குப் பிறகு முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது விம்பிள்டன் டென்னிஸ்


கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நடப்பாண்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 8,86,326 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 44,238 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக ஏற்கெனவே கடந்த ஒரு மாத காலமாக நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

மே மாதம் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இது நடைபெறுமா என்பதும் இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளது. இதைத் தொடர்ந்து, 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8, 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும், அது தற்போது நடைபெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகளவில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை. 

இதன்மூலம் 134-வது விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 28 ஜூன் முதல் 11 ஜூலை 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com