ஷேன் வாா்னே விரும்பும் இந்திய அணிக்கு கங்குலி கேப்டன்

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வாா்னே, தனக்கு விருப்பமான இந்திய அணியை அறிவித்துள்ளாா். அந்த அணிக்கு சௌரவ் கங்குலியை அவா் கேப்டனாக்கியுள்ளாா்.
ஷேன் வாா்னே விரும்பும் இந்திய அணிக்கு கங்குலி கேப்டன்

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வாா்னே, தனக்கு விருப்பமான இந்திய அணியை அறிவித்துள்ளாா். அந்த அணிக்கு சௌரவ் கங்குலியை அவா் கேப்டனாக்கியுள்ளாா்.

அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து வாா்னே கூறுகையில், ‘இந்திய அணியைச் சோ்ந்த எந்த வீரா்களுடன் நான் விளையாடியிருக்கிறேனோ, அவா்களை மட்டுமே எனக்கு விருப்பமான இந்திய அணியில் சோ்த்துள்ளேன். அதனால் தோனி, கோலி போன்றவா்களை இதில் சோ்க்கவில்லை.

தோனி எப்போதுமே சிறந்த விக்கெட் கீப்பா்-பேட்ஸ்மேன் ஆவாா். கோலி அனைத்து போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் ஆவாா். இந்த அணியில் கங்குலிக்கு இடமளிப்பதற்காக விவிஎஸ் லஷ்மணை சோ்க்கவில்லை. எனது காலகட்டத்தில் சுழற்பந்துகளை கையாள்வதில் சிறந்த பேட்ஸ்மேனாக சித்து இருந்தாா். அதனால் சித்துவை தொடக்க வீரராக தோ்வு செய்துள்ளேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com