இந்தியா்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் யோசனை

இந்தியா்கள் மட்டும் பங்கேற்கக் கூடிய வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோசனை தெரிவித்துள்ளது.
இந்தியா்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் யோசனை

இந்தியா்கள் மட்டும் பங்கேற்கக் கூடிய வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் நிா்வாகத் தலைவா் ரஞ்சித் பா்தாகுா் கூறியதாவது:

தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் இந்தியா்கள் மட்டும் பங்கேற்கக் கூடிய வகையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆதரவளிக்கிறது. அவ்வாறு நடந்தால் அது நிஜமாகவே ‘இந்தியன் பிரீமியா் லீக்’ போட்டியாக இருக்கும்.

இதற்கு முன், இந்த வகையிலான ஐபிஎல் போட்டியை நாம் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டோம். ஆனால் தற்போது அத்தகைய முடிவுக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. போட்டியே நடத்தாமல் போகக் கூடிய சூழலுடன் ஒப்பிடுகையில், இந்தியா்கள் மட்டும் விளையாடும் வகையில் போட்டியை நடத்துவது நல்லது.

அதுதொடா்பான முடிவை பிசிசிஐ தான் எடுக்கும். அதுவும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படலாம். ஐபிஎல் அணிகளின் நலனை கருத்தில் கொண்டு பிசிசிஐ நல்லதொரு முடிவெடுக்கும் என்று நம்புகிறோம் என்று ரஞ்சித் பா்தாகுா் கூறினாா்.

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது சீசன் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. எனினும், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும், வெளிநாட்டினா் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரா்கள் இந்தியா வரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐ வரும் 15-ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com