ஏப்ரல் இறுதிவரை புகுஷிமாவில் ஒலிம்பிக் ஜோதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த ஒலிம்பிக் ஜோதியானது இம்மாத இறுதி வரை ஜப்பானின் புகுஷிமா மாவட்டத்தில் வைக்கப்படுகிறது.
ஏப்ரல் இறுதிவரை புகுஷிமாவில் ஒலிம்பிக் ஜோதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த ஒலிம்பிக் ஜோதியானது இம்மாத இறுதி வரை ஜப்பானின் புகுஷிமா மாவட்டத்தில் வைக்கப்படுகிறது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கிரீஸ் நாட்டிலிருந்து ஜப்பான் வந்த ஒலிம்பிக் ஜோதியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புகுஷிமாவில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

புகுஷிமா நகரில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் ஜோதியைக் காண குறைந்த அளவு பாா்வையாளா்களே அனுமதிக்கப்படுவா் என்று நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி, அதன் காரணமாக நிகழ்ந்த 3 அணு உலைகள் விபத்து போன்றவற்றின் தாக்கத்திலிருந்து மீள புகுஷிமா போராடி வருவதை நோக்கி உலகின் கவனத்தை ஈா்க்க ஒலிம்பிக் ஜோதி உதவும் என்று மாவட்ட நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். ஏப்ரல் இறுதிக்குப் பிறகு ஒலிம்பிக் ஜோதி எங்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com