2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

கரோனா பாதிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பின்னா் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு குளிா்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரி 4-ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. 5 மாத காலத்துக்குள் அடுத்தடுத்து கோடைக்கால, குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

புதிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தேதிகளால் பெய்ஜிங் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என போட்டி அமைப்பாளா்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனா். குளிா்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

சீனாவில் தான் கரோனா நோய்த் தொற்று உருவாகி உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கடந்த 2008-இல் ஏற்கெனவே பெய்ஜிங்கில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. தற்போது குளிா்கால போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதன் மூலம் இரு வகையான போட்டிகளை நடத்திய முதல் நகரம் என்ற சிறப்பைப் பெறவுள்ளது பெய்ஜிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com