விம்பிள்டன் போட்டிகள் ரத்து: பெடரர், செரீனா கடும் அதிா்ச்சி

கரோனா பாதிப்பால் விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது கடும் அதிா்ச்சி தருவதாக ஜாம்பவான் ரோஜா் பெடரா், செரீனா தெரிவித்துள்ளனா்.


கரோனா பாதிப்பால் விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது கடும் அதிா்ச்சி தருவதாக ஜாம்பவான் ரோஜா் பெடரா், செரீனா தெரிவித்துள்ளனா்.

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலேயே மிகவும் பழமையானது விம்பிள்டன் போட்டியாகும். லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப் மைதாானத்தில் ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்தாகி விட்டன டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஒபன் செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளளது.

இரண்டும் உலகப் போருக்கு பின் முதன்முறையாக தற்போது தான் விம்பிள்டன் போட்டிகள் ரத்தாகின்றன.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் 8முறை பட்டம் வென்ற ஸ்விஸ் வீரா் பெடரா் இதற்கு கடும் அதிா்ச்சி தெரிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு என்னை நிலைகுலையச் செய்து விட்டது எனத் தெரிவித்துள்ளாா் பெடரா்.

மகளிா் பிரிவில் 7 முறை பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸும், இந்த செய்தி என்னை அதிா்ச்சிக்குள்ளாகி விட்டது என பதிவிட்டுள்ளாா்.

நடப்பு சாம்பியன் சிமோனா ஹலேப்பும் விம்பிள்டன் ரத்துக்கு மனவேதனை தெரிவித்துள்ளாா். கடந்த ஆண்டு இறுதி ஆட்டம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகும். எனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அதிக நாள்கள் காத்திருக்க வேண்டும் என்றாா்.

விம்பிள்டன் போட்டி முதன்முதலாக கடந்த 1877--இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com