கரோனா நிவாரணத்துக்கு அள்ளி வழங்கும் விளையாட்டு வீரர்கள்: நெய்மர் ரூ. 7.60 கோடி

அவருடைய வருமானம் ஒரு மாதத்துக்கு ரூ. 24.45 கோடி ($3.2 மில்லியன்)
கரோனா நிவாரணத்துக்கு அள்ளி வழங்கும் விளையாட்டு வீரர்கள்: நெய்மர் ரூ. 7.60 கோடி

கரோனா நிவாரண நிதியாக ரூ. 7.60 கோடியை வழங்கியுள்ளார் பிரபல கால்பந்து வீரர் நெய்மர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நிவாரண நிதியாக ரூ. 7.60 கோடியை (1 மில்லியன் டாலர்) வழங்கியுள்ளார் பிரபல பிரேஸில் கால்பந்து வீரர் நெய்மர். இந்த நிதியுதவி ஐநா குழந்தைகள் நல நிதி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவரின் அறக்கட்டளைக்கும் செல்கிறது. உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார் நெய்மர். பாரிஸ் செயிண்ட் - ஜெர்மெய்ன் கிளப்பில் அவருடைய வருமானம் ஒரு மாதத்துக்கு ரூ. 24.45 கோடி ($3.2 மில்லியன்). தென் அமெரிக்காவில் கரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு, பிரேஸில் தான். கரோனாவால் இதுவரை 9000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 359 பேர் இறந்துள்ளார்கள்.  

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 8.27 கோடி (1 மில்லியன் யூரோ) உதவித்தொகை வழங்கியுள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி. அவருடைய முன்னாள் மேலாளரும் கரோனா தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ. 8.27 கோடி நிதியுதவி அளித்துள்ளார். மற்றொரு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய ஏஜெண்ட் ஜார்ஜ் மெண்டஸும் லிஸ்பன், போர்டோவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 8.27 கோடி நிதியுதவி செய்துள்ளார்கள். மெஸ்ஸி உள்ளிட்ட 28 பிரபல கால்பந்து வீரர்கள், கரோனா குறித்த ஃபிஃபாவின் விழிப்புணர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com