கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்ட தோனி!

ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் தோனி தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டதாக சிஎஸ்கே அணியினர் கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்ட தோனி!

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.

கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் வருவதற்கு முன்பு ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் தோனி தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டதாக சிஎஸ்கே அணியினர் கூறியுள்ளார்.

சிஎஸ்கே இணையத்தளத்துக்கு அந்த அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் அளித்த பேட்டியில் தோனி குறித்து பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

பியூஷ் சாவ்லா: பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் தோனி. ஆட்டத்தின்போது எப்படி விளையாடுவாரோ அதேபோல தன் உழைப்பைச் செலுத்தினார்.

கரண் சர்மா: தினமும் இரண்டு, மூணு மணி நேரம் பேட்டிங் பயிற்சிகள் மேற்கொண்டார் தோனி. அவர் அதிரடியாக ஆடியதைப் பார்க்கும்போது நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு விளையாடுகிறார் என யாரும் கூறமுடியாது.

பிஸியோதெரபிஸ்ட் டாமி சிம்செக்: கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்டார் தோனி. அதைப் பார்க்கும்போது எந்தளவுக்கு நன்றாக விளையாட வேண்டும் என அக்கறையுடன் அவர் இருந்தார் என்பது தெரிய வந்தது.

பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி: இயல்பாக அவர் நல்ல உடற்தகுதியைக் கொண்டவர். சில மாதங்களாக அவர் விளையாடாமல் இருந்தது அவருடைய பயிற்சியில் தெரியவில்லை. பேட்டிங், கீப்பிங் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இந்த வருட ஐபிஎல் போட்டியை மிகவும் எதிர்பார்த்திருந்தார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com