இலங்கையுடனான ஜூன் மாத கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது தென் ஆப்பிரிக்கா

ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இலங்கையுடனான கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி ஒத்திவைத்துள்ளது.
இலங்கையுடனான ஜூன் மாத கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்தது தென் ஆப்பிரிக்கா

ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இலங்கையுடனான கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி ஒத்திவைத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 17,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இலங்கையுடனான கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி ஒத்திவைத்துள்ளது. இரு அணிகளும் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுவதாக இருந்தன. எங்கள் அணி வீரர்களால் இந்தத் தொடருக்காக முறையாகப் பயிற்சி எடுக்க முடியாது. மேலும் வீரர்களின் உடநலனும் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

ஒருநாள் லீக் போட்டியில் இந்தத் தொடர் இடம்பெற்றுள்ளது. 12 டெஸ்ட் அணிகள் மற்றும் உலக கிரிக்கெட் லீக் போட்டியை வென்ற நெதர்லாந்து உள்ளிட்ட 13 அணிகள் ஒருநாள் லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தானாகத் தகுதி பெற்றுவிடும்.

அடுத்ததாக, தென் ஆப்பிரிக்க அணி ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் குறித்த முடிவு மே மாதம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com