இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்தது கிரிக்கெட் மே.இ.தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்துள்ளது கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்தது கிரிக்கெட் மே.இ.தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்துள்ளது கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 24,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். எனினும் தி ஹண்ட்ரெட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒத்திவைத்துள்ளது கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள். இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் 4 அன்று தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறுவதாக இருந்தது.

கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறியதாவது: ஜூன் மாதம் விளையாடுவது வாய்ப்பில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து புதிய தேதிகள் குறித்து விவாதிப்போம். பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே எங்கள் அணி வீரர்கள் இங்கிலாந்துக்குச் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com