சச்சின் அளித்த பேட்டை வைத்து 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடி!

தன்னுடைய 2-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார்...
சச்சின் அளித்த பேட்டை வைத்து 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடி!

சாஹித் அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தன்னுடைய 2-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார். இதன்பிறகு இந்தச் சாதனையை கூரே ஆண்டர்சனும் (36 பந்துகள்) டி வில்லியர்ஸும் (31 பந்துகள்) முறியடித்தார்கள் .

அப்ரிடியின் அதிவேகச் சதம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது ஒரு பேட்டியில் கூறியதாவது:

1996-ல் நைரோபியில் அறிமுகமானார் அப்ரிடி. முஷ்டாக் அகமதுக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக அணியில் இணைந்தார் அப்ரிடி. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்றார் வாசிம் அக்ரம். இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் ஜெயசூர்யாவும் கலுவிதரனாவும் அதிரடியாக விளையாடுவதால் நாங்களும் அதேபோல விளையாட முடிவெடுத்தோம். 

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது 3-ம் நிலை வீரராக அப்ரிடி களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. சச்சின் டெண்டுல்கரிடமிருந்து ஒரு பேட்டைப் பெற்றிருந்தார் வக்கார் யூனுஸ். அந்தப் பேட்டை வைத்து அதிரடியாக விளையாடி சதமடித்தார் அப்ரிடி. நன்கு பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளராக அறிமுகமான அப்ரிடிக்கு அதன்பிறகு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை அமைந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com