விவோ சீன நிறுவனத்தின் ஐபிஎல் ஒப்பந்தம் தொடரும்: பிசிசிஐ அறிவிப்பு

சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில்...
விவோ சீன நிறுவனத்தின் ஐபிஎல் ஒப்பந்தம் தொடரும்: பிசிசிஐ அறிவிப்பு

சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நிறுவனம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது.

அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, லடாக் எல்லையில் ராணுவத்தினரைக் குவித்து பிரச்னை செய்து வந்த சீனா மீது இந்தியா்களுக்கு கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு பின்னா் சீன நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களை ஈடுபட வைத்துள்ளது.

சீனப் பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என திரைத்துறை மற்றும் விளையாட்டுப் பிரபலங்களுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.  இதனால் சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் பிசிசிஐ ட்விட்டரில் தெரிவித்ததாவது:

எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, ஐபிஎல் ஸ்பான்சர்களின் ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்க ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூடவுள்ளது என்று தெரிவித்தது. 

2015-ல் இரு வருடங்களுக்கு ஐபிஎல் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டது விவோ நிறுவனம். 2017-ல் ஒப்பந்தத்தை ஐந்து வருடங்களுக்குத் தக்கவைத்துக்கொண்டது. 

இந்நிலையில்  இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் ஸ்பான்சராக விவோ என்கிற சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com