ஐபிஎல் 2020: பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவுகள்

இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.
ஐபிஎல் 2020: பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவுகள்

இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று ஐபிஎல் தொடங்குகிறது.
* இறுதிச்சுற்று நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நடைபெறுகிறது. முதல்முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
* 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்துகொள்ளும் ஐபிஎல் போட்டி நீண்ட நாள் நடைபெறுவது இதுவே முதல்முறை.
* 10 நாள்களுக்கு ஒரே நாளில் இரு ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 
* துபை, அபு தாபி, ஷார்ஜா ஆகிய மையங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
* ஓர் அணியில் 24 வீரர்களுக்கு அனுமதி
* கரோனா மாற்று வீரர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com