இந்தியாவில் 5 முறை கரோனா பரிசோதனை: மும்பை இந்தியன்ஸ் அணி திட்டம்

ஐபிஎல் போட்டியில் விளையாட மெல்ல மெல்லத் தயாராகி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்தியாவில் 5 முறை கரோனா பரிசோதனை: மும்பை இந்தியன்ஸ் அணி திட்டம்

ஐபிஎல் போட்டியில் விளையாட மெல்ல மெல்லத் தயாராகி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று ஐபிஎல் தொடங்குகிறது. இறுதிச்சுற்று நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நடைபெறுகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட மெல்ல மெல்லத் தயாராகி வருகிறது இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணித் தரப்பு கூறியதாவது:

உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் விரைவில் மும்பைக்கு வரவுள்ளார்கள். வந்தவுடன் அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மும்பைக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு வீரரும் அவர்களுடைய ஊரிலேயே இரு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மும்பையில் அனைத்து வீரர்களுக்கும் மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கு முன்பு அனைத்து வீரர்களும் 5 முறை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com