3-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி: ஹைலைட்ஸ் விடியோ

329 ரன்கள் என்கிற கடுமையான இலக்கை எதிர்கொண்டபோதும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை...
3-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி: ஹைலைட்ஸ் விடியோ


329 ரன்கள் என்கிற கடுமையான இலக்கை எதிர்கொண்டபோதும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது அயர்லாந்து அணி. 

அயர்லாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, செளதாம்ப்டனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடியது.

கேப்டன் மார்கன் 106 ரன்களும் பேண்டன் 58 ரன்களும் வில்லி 51 ரன்களும் எடுத்ததால் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி .

இதன்பிறகு பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள். தொடக்க வீரர் ஸ்டிர்லிங் 128 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ஆண்டி பால்பிர்னி 112 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அதை 5 பந்துகளில் எடுத்து வெற்றியடைந்தது அயர்லாந்து அணி. 49.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து இங்கிலாந்து எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று அதிர்ச்சியளித்துள்ளது. 

2-1 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து. ஸ்டிர்லிங்  ஆட்ட நாயகனாகவும் டேவிட் வில்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com