கரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று வீரர்கள் சிபிஎல் போட்டியிலிருந்து விலகல்!

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என 162 பேருக்கும் கரோனா இல்லை என பரிசோதனைகளில் முடிவாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று வீரர்கள் சிபிஎல் போட்டியிலிருந்து விலகல்!

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என 162 பேருக்கும் கரோனா இல்லை என பரிசோதனைகளில் முடிவாகியுள்ளது.

இந்த வருட சிபிஎல் போட்டி, ஆகஸ்ட் 18-ல் தொடங்கவுள்ளது. டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று செப்டம்பர் 10-ல் நடைபெறுகிறது. 

இந்நிலையில் சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என 162 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கரோனா இல்லை என பரிசோதனைகளில் முடிவாகியுள்ளதாக சிபிஎல் போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார். இதையடுத்து அனைவரும் அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படவுள்ளார்கள். இதன்பிறகும் அனைவருக்கும் கரோனா பரிசோதனைகள் மீண்டும் மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் குறிப்பிட்ட நபர் நட்சத்திர விடுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்படுவார். 

சிபிஎல் போட்டியில் பங்கேற்க உறுதியளித்த வீரர்களில் மூவர் மட்டும் கரோனா காரணமாகப் பங்கேற்கவில்லை. ஒரு வீரருக்கு கரோனா உறுதியான நிலையில் அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் இரு வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அதேபோல ஒரு பயிற்சியாளருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் டிரினிடாடுக்கு வரவில்லை. எனினும் மூன்று வீரர்கள், பயிற்சியாளர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார். 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com