2-ம் நாளில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி: ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2-ம் நாளில் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி: ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தானுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளைகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தது. இரு சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸ் 100% உடற்தகுதியில் இல்லாமல் போனாலும் இந்த டெஸ்டில் விளையாடுவதாக ஜோ ரூட் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் மசூத் 156 ரன்கள் எடுத்து அசத்தினார். 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. போப் 46, பட்லர் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com