பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை

ரசிகர்களால் மைதானத்துக்கு வர முடியும் என்றால் மெல்போர்னிலேயே பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் என...
பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை

இந்த வருடம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பாக்ஸிங் டே மெல்போனில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இரு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

பாக்ஸிங் டே டெஸ்ட் (டிசம்பர் 26 முதல் 30 வரை) இந்த முறை மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் நடைபெறுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. விக்டோரியா மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பாக்ஸிங் டே மெல்போனில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது:

விக்டோரியாவில் விரைவில் சகஜ நிலைமை திரும்பும் என எதிர்பார்க்கிறோம். எனவே பாக்ஸிங் டே டெஸ்ட்டை மெல்போர்னில் நடத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றன. ரசிகர்களால் மைதானத்துக்கு வர முடியும் என்றால் மெல்போர்னிலேயே பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். 

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜனவரி 12, பெர்த்

2-வது ஒருநாள்: ஜனவரி 15, மெல்போர்ன்

3-வது ஒருநாள்: ஜனவரி 17, சிட்னி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com