ஐபிஎல் போட்டியில் தோனி நன்றாக விளையாடுவார்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

சர்வதேச ஆட்டங்களை விடவும் ஐபிஎல் ஆட்டங்களில் தோனி சிறப்பாக விளையாடுவதற்குக் காரணம்...
ஐபிஎல் போட்டியில் தோனி நன்றாக விளையாடுவார்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ஐபிஎல் போட்டியில் தோனி நன்றாக விளையாடுவார் என முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோனி பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் தோனி நன்றாக விளையாடுவார். சர்வதேச ஆட்டங்களை விடவும் ஐபிஎல் ஆட்டங்களில் தோனி சிறப்பாக விளையாடுவதற்குக் காரணம், நான்கைந்து பந்துவீச்சாளர்களை ஐபிஎல்-லில் எதிர்கொண்டால் போதும். ஐபிஎல்-லில் சில வீரர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள். சில வீரர்கள் சுமாராகப் பந்துவீசுவார்கள். சர்வதேச ஆட்டங்களில் ஐந்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசுவார்கள். எனவே சுமாராகப் பந்துவீசும் பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பதம் பார்த்துவிடுவார் தோனி. 

கோலியின் திருமணத்தில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அணியில் வேகமாக ஓடும் வீரரை நான் தோற்கடிக்கும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட நல்ல உடற்தகுதியைக் கொண்டுள்ளதாக அறிந்துகொள்வேன் என்றார். ஐபிஎல்-லில் நிலவு சூழல் தோனிக்குப் பொருத்தமாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com