பாகிஸ்தான் அணிக்கு நம்பிகையளிக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சுக்குப் பெயர் போன பாகிஸ்தானில் தற்போது இரு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள்...
நசீம் ஷா
நசீம் ஷா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்று புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளார்கள்.  

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் மசூத் 156 ரன்கள் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சுக்குப் பெயர் போன பாகிஸ்தானில் தற்போது இரு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள். நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி என 20 வயது கூட இரு வீரர்களும் பாகிஸ்தான் அணியின் வருங்கால நட்சத்திரங்களாகத் திகழ்வார்கள் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள். 

இந்திய அணியில் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் டெஸ்ட் அணியில் பெரும்பாலும் மூத்த பந்து வீச்சாளர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் என அனைவரும் மூத்த வீரர்களே. பும்ரா மட்டுமே சமீபகாலமாக இந்திய அணியின் இடம்பிடித்து சாதித்து வரும் இளம் வீரர். 

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வயது:

நசீம் ஷா - 17 வயது (4 டெஸ்டுகள்)
ஷாஹூன் அப்ரிடி - 20 வயது (8 டெஸ்டுகள்)
முகமது அப்பாஸ் - 30 வயது (18 டெஸ்டுகள்)

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களின் வயது:

பும்ரா - 26 வயது (14 டெஸ்டுகள்)
ஷமி - 29 வயது (49 டெஸ்டுகள்)
இஷாந்த் சர்மா - 31 வயது (97 டெஸ்டுகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com