இணைய தளங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்?

இணைய தளங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை...
இணைய தளங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்?

இணைய தளங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை இந்திய கேப்டன் விராட் கோலி அடைந்துள்ளார்.

செம்ரஷ் என்கிற நிறுவனம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு மாதத்துக்கு 16.2 லட்சம் தடவை கோலியின் பெயர் இணையதில் தேடப்பட்டுள்ளது. அதேபோல இந்திய கிரிக்கெட் அணி, ஒரு மாதத்துக்கு 2.4 லட்சம் தடவை தேடப்பட்டுள்ளது.

கோலிக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் அதிக தடவை இணையதில் தேடப்பட்டுள்ளார்கள். ஜார்ஜ் மெக்கே, ஜோஷ் ரிச்சர்ட்ஸ், ஹார்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் மேத்யூஸ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார்கள். முதல் 20 இடங்களில் ஸ்மிருதி மந்தனா, எல்லீஸ் பெர்ரீ ஆகிய வீராங்கனைகள் முறையே 12, 20-ம் இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை இணையதில் அதிகம் பேர் தேடியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com