37 நாள்களுக்கு சர்வதேச கிரிக்கெட்: புதிய சவாலுக்குத் தயாராகும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

இந்த வருடக் கடைசி முதல் நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.
நன்றி: டிவிட்டர்/பிளாக்கேப்ஸ்
நன்றி: டிவிட்டர்/பிளாக்கேப்ஸ்

இந்த வருடக் கடைசி முதல் நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

100 நாள்களாகச் சமூகப் பரவல் இல்லாமல் கரோனா வைரஸை விரட்டிய நாடாக உள்ளது நியூசிலாந்து. இதையடுத்து அங்குச் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடைபெறவுள்ளன. 

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் நியூசிலாந்துக்குச் சென்று சர்வதேசத் தொடர்களில் விளையாடவுள்ளன. அனைத்து அணிகளும் நியூசிலாந்துக்கு வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார். இதனால் 37 நாள்களுக்குச் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நியூசிலாந்தில் நடைபெறும் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் நியூசிலாந்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளன. வங்கதேச அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரிலும் விளையாடவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com