2-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம்: மீண்டும் மழை குறுக்கீடு!

இங்கிலாந்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புகைப்படம்: ட்விட்டர் | ஐசிசி
புகைப்படம்: ட்விட்டர் | ஐசிசி


இங்கிலாந்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சௌதாம்படனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தில் சதமடித்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னுக்கு ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ஆபித் அலியுடன் கேப்டன் அசார் அலி இணைந்தார். இங்கிலாந்து பீல்டர்கள் தவறவிட்ட கேட்ச் வாய்ப்புகளால் இந்த இணை தாக்குப்பிடித்து விளையாடியது. 24-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதேசமயம், உணவு இடைவேளையும் முன்கூட்டியே எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மழையால் ஆட்ட நேரம் வீணாகவில்லை.

உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. ஆபித் அலி 33 ரன்களுடனும், அசார் அலி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, ஆட்டம் மீண்டும் தொடங்கியது. உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த அசார் அலி, கூடுதலாக ரன் எதுவும் சேர்க்கவில்லை. இந்த நிலையில், அவர் 20 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், இந்த முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆபித் அலி 49 ரன்களுடனும், பாபர் அசாம் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com