விதிமுறையை மீறியதால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்

விதிமுறையை மீறியதால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி 90 வயது மூதாட்டி ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஷ், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு வந்துள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் 2-வது  டெஸ்ட் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு டி20 தொடர் நடைபெறும்.

செளதாம்ப்டனில் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்கியுள்ளார்கள். மைதானத்தில் அருகில் உள்ள கோல்ப் மைதானத்துக்குச் சென்ற பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஷ், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி 90 வயது மூதாட்டி ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படத்தைத் தனது சமூகவலைத்தளத்திலும் அவர் வெளியிட்டார். இந்தச் செயல் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2 மீட்டர் தனி மனித இடைவெளியை மீறி ஒருவருடன் ஹபீஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அணி மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியான பிறகே அவர் அணியினருடன் மீண்டும் இணைந்துகொள்வார். புதன் அன்று அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வியாழன் அன்று கிடைக்கும். இதன்மூலம் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com