ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய...
ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட விளையாட்டு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறும் 4-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். 2019-ல் ரோஹித் சர்மா ஏராளமான ரன்களைக் குவித்தார். 5 டெஸ்டுகளில் 556 ரன்களும் ஒருநாள் ஆட்டத்தில் 1490 ரன்களும் எடுத்தார். ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளா் இஷாந்த் சா்மா, கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு இந்த ஆண்டுக்கான அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வில் வித்தை வீரா் அதானு தாஸ், ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்குா், கபடி வீரா் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரா் திவிஜ் சரண் உள்ளிட்டோா் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் (தடகளம்), ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), என். உஷா (குத்துச்சண்டை), நந்தன் பி பால் (டென்னிஸ்) உள்ளிட்ட 15 வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது.

துரோணாச்சார்யா விருதை இந்த ஆண்டு 13 பயிற்சியாளர்கள் பெறுகிறார்கள். தர்மேந்திரா திவாரி (வில்வித்தை), ஷிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமார் (டென்னிஸ்), ஜூட் பெலிக்ஸ் (ஹாக்கி), ஜஸ்பல் ராணா (துப்பாக்கிச் சுடுதல்) போன்ற பயிற்சியாளர்கள் இந்த விருதைப் பெறவுள்ளார்கள். 

விருது பெறுவோருக்கு வரும் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது. 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ரோஹித் சா்மா (கிரிக்கெட்)
மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல், மாற்றுத்திறனாளி)
ராணி ராம்பால் (மகளிா் ஹாக்கி)
வினேஷ் போகத் (மல்யுத்தம்)
மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்)

அர்ஜூனா விருது

அதானு தாஸ் (வில்வித்தை)
டூட்டி சந்த் (தடகளம்)
சாத்விக் சைராஜ் (பாட்மிண்டன்)
சிராக் சந்திரசேகர் (பாட்மிண்டன்)
விஷேஷ் (கூடைப்பந்து)
சுபேதார் மனிஷ் கெளசிக் (குத்துச்சண்டை)
லவ்லினா (குத்துச்சண்டை)
இஷாந்த் சர்மா (கிரிக்கெட்)
தீப்தி சர்மா (கிரிக்கெட்)
சாவந்த் அஜய் (குதிரையேற்றம்)
சந்தேஷ் (கால்பந்து)
அதிதி அசோக் (கோல்ப்)
ஆகாஷ்தீப் சிங் (ஹாக்கி)
தீபிகா (ஹாக்கி)
தீபக் (கபடி)
கேல் சரிகா (கோ கோ)
தத்து பாபன் (துடுப்புப் படகு)
மானு பாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்)
செளரப் செளத்ரி (துப்பாக்கிச் சுடுதல்)
மதுரிகா (டேபிள் டென்னிஸ்)
திவிஜ் சரண் (டென்னிஸ்)
ஷிவா கேசவன் (குளிர்கால விளையாட்டு)
திவ்யா (மல்யுத்தம்)
ராகுல் அவரே (மல்யுத்தம்)
சுயாஷ் (நீச்சல், மாற்றுத்திறனாளி)
சந்தீப் (தடகளம், மாற்றுத்திறனாளி)
மனீஷ் (துப்பாக்கிச் சுடுதல், மாற்றுத்திறனாளி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com