செஸ் ஒலிம்பியாட்: சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தியா & ரஷியா!

அரையிறுதிச் சுற்றில் போலந்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிச்சுற்றில் ரஷியாவுடன் மோதியது.
படம் - twitter.com/FIDE_chess
படம் - twitter.com/FIDE_chess


இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவும் ரஷியாவும் கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரையிறுதிச் சுற்றில் போலந்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிச்சுற்றில் ரஷியாவுடன் மோதியது. விதித் குஜ்ராத்தி (கேப்டன்), விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, ஹரிகா, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, திவ்யா தேஷ்முக் போன்றோர் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டார்கள். 

முதல் சுற்றில் 3-3 என டிரா ஆனது. பிறகு திவ்யா தேஷ்முக், நிஹல் சரின் ஆகியோர் விளையாடிய ஆட்டத்தில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களிருவரும் தோற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய அணி முறையிட்டது. இதையடுத்து இந்தியா, ரஷியா ஆகிய இரு அணிகளும் செஸ் ஒலிம்பியாட் பட்டத்தைக் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை ரஷியாவுடன் பகிர்ந்துகொண்ட இந்திய அணிக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com