அமெரிக்க டி20 லீக் போட்டியில் ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி!

உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பது...
அமெரிக்க டி20 லீக் போட்டியில் ஷாருக் கானின் நைட் ரைடர்ஸ் அணி!

ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளைக் கொண்டுள்ள தி நைட் ரைடர்ஸ் குழுமம், அடுத்ததாக அமெரிக்க டி20 லீக் போட்டியிலும் பங்குபெறவுள்ளது.

ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இணைந்து தி நைட் ரைடர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி ஐபிஎல், சிபிஎல் டி20 லீக்குகளில் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சிபிஎல் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளைக் கொண்டுள்ளார்கள்.  

2022 முதல் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்கிற எம்எல்சி டி20 போட்டி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் தி நைட் ரைடர்ஸ் அணியும் இடம்பெறவுள்ளது. ஆறு அணிகள் பங்குபெறும் எம்எல்சி டி20 போட்டியின் ஆலோசகர்களாக தி நைட் ரைடர்ஸ் செயல்படப் போகிறது.

ஒரு நிறுவனம் - ஐபிஎல், சிபிஎல் போட்டிகளில் ஓர் அணியின் உரிமையைப் பெற்று செயல்படவேண்டும். ஆனால் எம்எல்சி போட்டியில் பங்குபெறும் அனைத்து அணிகளும் போட்டிக்காக முதலீடு செய்து அதில் பங்களிக்க வேண்டும். இதனால் அனைத்து அணிகளும் போட்டியின் பங்குதாரர்களாக இருப்பார்கள். 

அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் என்கிற ஏசிஇ நிறுவனம், யூஎஸ்ஏ கிரிக்கெட் அமைப்புடன் இணைந்து எம்எல்சி போட்டியை நடத்தவுள்ளது.

இதுபற்றி நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

எம்எல்சி போட்டியில் ஓர் அணியாக மட்டும் இல்லாமல் எங்களைப் பார்க்காமல் ஆலோசகர்களாகவும் கருதுகிறார்கள். அமெரிக்காவின் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் திட்டமிட்டு பணிகள் நடைபெறவுள்ளன. அங்குள்ள வசதிகளை மேம்படுத்தி, அடுத்த சில வருடங்களில் ஆறு கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது. அமெரிக்காவில் விளையாட்டுக்கான நல்ல சூழல் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com