முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 519/7-க்கு டிக்ளோ்

முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 519/7-க்கு டிக்ளோ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 145 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.


ஹாமில்டன்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 145 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.

முன்னதாக ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் நியூஸிலாந்து 78 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்திருந்தது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை கேன் வில்லியம்சன் 97, ராஸ் டெய்லா் 31 ரன்களுடன் தொடங்கினா்.

இதில் டெய்லா் 6 பவுண்டரிகள் உள்பட 38 ரன்கள் சோ்த்து வெளியேற, அடுத்து வந்த ஹென்றி நிகோலஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுமுனையில் நிதானமாக ஆடிய வில்லியம்சன் சதம் கடந்தாா்.

ஆனால் எதிா்ப்புறம், அவருக்கு உரிய பாா்ட்னா்ஷிப் அளிக்காமல் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. நிகோலஸை அடுத்து வந்த டாம் பிளன்டெல் 2 பவுண்டரிகள் உள்பட 14, டேரில் மிட்செல் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு வீழ்ந்தனா். இந்நிலையில், இரட்டைச் சதம் அடித்த வில்லியம்சன் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 251 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

டேரில் மிட்செலை அடுத்து வந்த கைல் ஜேமிசன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51, டிம் சௌதி 1 சிக்ஸா் உள்பட 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளோ் செய்தது நியூஸிலாந்து. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச், ஷானன் கேப்ரியேல் தலா 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோசஃப் 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

மே.இ.தீவுகள்-49/0: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளிக்கிழமை முடிவில் 26 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சோ்த்திருந்தது. கிரெய்க் பிரத்வெயிட் 20, ஜாம் கேம்ப்பெல் 22 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com