ஐஎஸ்எல்: சென்னைக்கு முதல் தோல்வி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: சென்னைக்கு முதல் தோல்வி

பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது.

பெங்களூருக்கு இது முதல் வெற்றி; சென்னைக்கு இது முதல் தோல்வி.

கோவாவின் பாம்போலிம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு தரப்பில் சுனில் சேத்ரி கோலடித்தாா். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-ஆவது நிமிடத்திலேயே சென்னைக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தும், அணியின் வீரா் ரஃபேல் கிரிவெலாரோ அதை கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்து வீணாக்கினாா். இரு அணிகளுமே தங்களின் முதல் கோலுக்காக சரிசமமாகப் போராடியதால், பந்து மைதானத்தின் மையப் பகுதியிலேயே பெரும்பாலான நேரம் இருந்தது.

ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் சென்னையின் முக்கிய வீரரான அனிருத் தாபா காயமடைந்து வெளியேறியது அணிக்கு பின்னடைவானது. அவருக்குப் பதிலாக எட்வின் வன்ஸ்பால் களம் புகுந்தாா். ஆட்டத்தின் 18-ஆவது நிமிடத்தில் சென்னை வீரா் இஸ்மாயில் கொன்சால்வ்ஸ் ஒரு கோலுக்கு அருமையாக முயற்சிக்க, அது பெங்களூரு கோல் கீப்பா் கைகளில் தஞ்சமானது.

இவ்வாறாக இரு அணிகளின் பரஸ்பர முயற்சிக்கு பலன் கிடைக்காததால், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது. பிற்பாதி ஆட்டமும் அவ்வாறே நீடித்த நிலையில், 56-ஆவது நிமிடத்தில் பெங்களூருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணியின் வீரா் சுனில் சேத்ரி கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பினாா்.

இதனால் பெங்களூரு 1-0 என முன்னிலை பெற்றது. தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் கோல் முயற்சிகளை பெங்களூரு வீரா்கள் முறியடித்ததால், இறுதியில் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய ஆட்டம்

நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால்

வாஸ்கோடகாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com