கேப்டனாகவும் சாதித்து வரும் விராட் கோலி: கடைசி ஏழு டி20 தொடர்களில் தோல்வியடையாத இந்திய அணி!

ஒரு கேப்டனாகவும் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் விராட் கோலி.
கேப்டனாகவும் சாதித்து வரும் விராட் கோலி: கடைசி ஏழு டி20 தொடர்களில் தோல்வியடையாத இந்திய அணி!

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாகவும் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. பேட்டிங்கில் தவன், கோலி, பாண்டியா அதிரடி காட்ட, பந்துவீச்சில் நடராஜன் அசத்தினாா். விக்கெட்டை இழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.

இந்திய அணி, கடைசியாக விளையாடிய ஏழு டி20 தொடர்களிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. 2019 மார்ச் முதல் டி20 தொடர்களில் இந்திய அணி தோற்றதில்லை. ஏழு தொடர்களில் ஆறில் வெற்றி கண்டுள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை 1-1 எனச் சமன் செய்தது. கடந்த ஐந்து டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது. 2019 பிப்ரவரியில் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி 2-0 என டி20 தொடரை வென்றது. அதற்குப் பிறகு வெற்றி நடை போட்டு வருகிறது இந்திய அணி.

இந்திய அணியின் கடைசி ஏழு டி20 தொடர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்த இந்தியா: 3-0.
தென் ஆப்பிரிக்காவுடன் சமன் செய்த இந்தியா: 1-1 
வங்கதேசத்தைத் தோற்கடித்த இந்தியா: 2-1
மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்த இந்தியா: 2-1
இலங்கைத் தோற்கடித்த இந்தியா: 2-0
நியூசிலாந்தைத் தோற்கடித்த இந்தியா: NZ 5-0
ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்தியா: 2-0*

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டி20 தொடரை வென்று சாதித்துள்ளது. இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ள முதல் இந்திய கேப்டன், விராட் கோலி தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com