14 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி

பாகிஸ்தானில் அடுத்த வருடம் இரு டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.
14 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி

பாகிஸ்தானில் அடுத்த வருடம் இரு டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. 2017 முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் பாகிஸ்தானில் மீண்டும் நடைபெற்று வருகின்றன. அந்த வருடம் லாகூரில் இலங்கை அணி ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடியது. 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த வருட டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடியது. 

16 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஜனவரியில் டி20 தொடருக்காக பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செல்லவிருந்த நிலையில் அத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு 2021 அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. அக்டோபர் 14, 15 தேதிகளில் டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

இதேபோல தென் ஆப்பிரிக்க அணியும் பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. கடைசியாக 2007-ல் பாகிஸ்தானுக்கு வந்த தென் ஆப்பிரிக்க அணி, தற்போது மீண்டும் அங்கு நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் பாகிஸ்தானில் 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் தொடர்கள் ஜனவரி 26-ல் தொடங்கி, பிப்ரவரி 14-ல் முடிவடையவுள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு ஜனவரி 16 அன்று செல்லும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, குறிப்பிட்ட நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com