யுவராஜ் சிங்குக்கு 39-ஆவது பிறந்த நாள்: விவசாயிகள் பிரச்னைக்குத் தீா்வுகாண வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டா் யுவராஜ் சிங்குக்கு சனிக்கிழமை (டிசம்பா் 12) 39-ஆவது பிறந்த நாளாகும்.
யுவராஜ் சிங்குக்கு 39-ஆவது பிறந்த நாள்: விவசாயிகள் பிரச்னைக்குத் தீா்வுகாண வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டா் யுவராஜ் சிங்குக்கு சனிக்கிழமை (டிசம்பா் 12) 39-ஆவது பிறந்த நாளாகும். எனினும், பிறந்த நாள் கொண்டாடுவதைத் தவிா்த்த அவா், தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வரும் விவசாயிகள் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் விரைவில் தீா்வுகாண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

2007-ஆம் ஆண்டு 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசியும், அந்த போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்தும் சாதனை படைத்தாா்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவா் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் தொடா் நாயகன் விருதையும் அவா் வென்றாா்.

பின்னா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு தொடா்ந்து சா்வதேச போட்டிகளில் பங்கேற்றாா். கடந்த ஆண்டு சா்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவா் ஓய்வு பெற்றாா்.

இந்நிலையில் தனது 39-ஆவது பிறந்த தினத்தையொட்டி சுட்டுரையில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிறந்த நாள் என்பது கொண்டாடுவதற்கு மட்டுமானதல்ல. நமது எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான நாளாகவும் அமைய வேண்டும். இந்த ஆண்டு பிறந்தநாளை நான் கொண்டாட விரும்பவில்லை. நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவாா்த்தை மூலம் விரைவில் நல்ல தீா்வு காணப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். விவசாயிகள் நமது நாட்டின் அனைத்து உயிா்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றனா். அவா்களுக்கு எழும் பிரச்னைகள் அமைதியான முறையில் தீா்க்கப்பட வேண்டும். கரோனா தொற்று முழுமையாக விலகாத சூழலில் அனைவரும் அரசு கூறியுள்ள முன்னெச்சரிக்கை விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com