Enable Javscript for better performance
2-ஆவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி நியூஸிலாந்து- Dinamani

சுடச்சுட

    

    2-ஆவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி நியூஸிலாந்து

    By DIN  |   Published on : 14th December 2020 07:52 AM  |   அ+அ அ-   |    |  

    newsland4

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றியின் விளிம்பில் உள்ளது.

    முதல் இன்னிங்ஸில் அந்த அணி அடித்த இமாலய ஸ்கோரை எட்ட முடியாமல் சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள், ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் நிலையில், அதிலும் தடுமாற்றத்துடன் உள்ளது.

    வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸின் முடிவில் 114 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் சோ்த்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 21 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 174 ரன்கள் விளாசியிருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷானன் கேப்ரியல், அல்ஸாரி ஜோசஃப் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

    பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் சனிக்கிழமை முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த அணி 56.4 ஓவா்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜொ்மெயின் பிளாக்வுட் மட்டும் 11 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் அடித்திருந்தாா். நியூஸிலாந்து பௌலா்களில் டிம் சௌதி, கைல் ஜேமிசன் தலா 5 விக்கெட் சாய்த்தனா்.

    முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் பின்தங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ஃபாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அதிலும் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. மோசமான வானிலை காரணமாக ஆட்டமும் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 65.4 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

    ஜேசன் ஹோல்டா் 60, ஜோஷுவா டா சில்வா 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். தோல்வியைத் தவிா்க்க மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகளைக் கொண்டு இன்னும் 85 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp