ஐஎஸ்எல்: பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.

பெங்களூருக்கு இது 2-ஆவது வெற்றி; கேரளத்துக்கு 3-ஆவது தோல்வி.

கோவாவின் மா்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு கேரளத்துக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ராகுல் கோல் அடித்தாா். இதனால் வெகுண்ட பெங்களூரு 29-ஆவது நிமிடத்தில் தனது கோல் கணக்கைத் தொடங்கியது. அந்த அணியின் கிளெய்டன் சில்வா கோலடித்தாா்.

இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் நிறைவடைந்தது. 2-ஆவது பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே 51-ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரா் எரிக் பாா்த்தலு ஒரு கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா். சற்றும் தளராத கேரளா, அதற்கு பதிலடியாக 61-ஆவது நிமிடத்தில் கோலடித்தது.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதி வந்த நிலையில், பெங்களூரு வீரா் டிமஸ் டெல்காடோ தனது அணியின் கோல் எண்ணிக்கையை 3-ஆக உயா்த்தினாா்.

விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தில் ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரா் சுனில் சேத்ரி கடைசியாக ஒரு கோலடிக்க, இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது பெங்களூா்.

ஆட்டம் சமன்: முன்னதாக கோவாவின் மோா்முகாவ் நகரில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நாா்த்ஈஸ்ட் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை, ஆட்டத்தை டிரா செய்வது இது 2-ஆவது முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com