யு-19 உலகக் கோப்பை: தகுதிச்சுற்று அட்டவணை மாற்றியமைப்பு

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை கரோனா சூழல் காரணமாக ஐசிசி மாற்றியமைத்துள்ளது.
யு-19 உலகக் கோப்பை: தகுதிச்சுற்று அட்டவணை மாற்றியமைப்பு

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை கரோனா சூழல் காரணமாக ஐசிசி மாற்றியமைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன. 2020-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் செயல்பட்டதன் அடிப்படையில் அவை தோ்வாகியுள்ளன.

இந்நிலையில், எஞ்சியுள்ள 5 இடங்களுக்கான அணிகளை தோ்வு செய்யும் நடைமுறை கரோனா சூழல் காரணமாக ஓராண்டு தாமதமாகியுள்ளது. அந்த இடங்களுக்கான போட்டிகள் 7 பிராந்தியங்களில் 2021 ஜூன் முதல் நடைபெறவுள்ளன. மொத்தமாக அவற்றில் 33 அணிகள் விளையாடுகின்றன.

இதில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பிராந்தியங்களில் அணிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் அங்கு 2 டிவிஷன்களாக தகுதிச்சுற்றுகள் நடைபெறவுள்ளன. அதுதவிர அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பிசிபிக், ஐரோப்பா பிராந்தியங்களில் தலா ஒரு தகுதிச்சுற்று போட்டி நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com